Featured Video


Breaking News

About Us

Text Widget

HTML

Gallery

Sunday, 1 February 2015

CCL : சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெலுங்கு வாரியர்ஸ்



இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் (சி.சி.எல்.) இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதியது.

டாஸ் வென்ற தெலுங்கு வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியில் ரமணா மற்றும் விக்ராந்த் களம் இறங்கினார்கள். இதில் ரமணா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய விஷ்ணு, விக்ராந்துடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்கள். விஷ்ணு 21 ரன்கள் எடுத்த நிலையில் சாம்ராட் பந்தில் அகிலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக 3-வது விக்கெட்டுக்கு சாந்தனு களம் இறங்கினார். சென்னை அணியின் ஸ்கோர் 62 ரன்கள் இருந்தபோது விக்ராந்த் 23 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் சிறிது நேரத்திலேயே சாந்தனுவும் 21 ரன்களில் அவுட் ஆனார்.

அதன்பின் களம் இறங்கிய பிருத்வி மற்றும் ஜீவா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். இறுதியில் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தெலுங்கு வாரியர்ஸ் அணி சார்பாக பிரின்ஸ் மற்றும் சச்சின் ஜோசி களம் இறங்கினார்கள். இவர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். சச்சின் ஜோசி 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜீவா பந்தில் ஷாமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவருடன் இணைந்து விளையாடிய பிரின்ஸ் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்த களம் இறங்கிய ரகு 11 ரன்களில் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுதிர் பாபு மற்றும் கேப்டன் அகில் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.

ஆட்டத்தின் இறுதியில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சுதிர் 35 ரன்களுடனும், அகில் 32 ரன்களுடன் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தெலுங்கு வாரியர்ஸ் முதல் சாம்பியன் பட்டத்தை ருசித்து உள்ளது.
Read more ...

டார்லிங் படக்குழுவினரை பாராட்டிய விஜய்

பொங்கல் தினத்தன்று விக்ரம் நடிப்பில் ‘ஐ’, விஷால் நடிப்பில் ‘ஆம்பள’ என இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ படமும் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இது படக்குழுவினர்ககளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக விஜய் ‘டார்லிங்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பாராட்டியுள்ளார்.

டார்லிங் படத்தை விஜய்க்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். படத்தை விஜய் மிகவும் ரசித்து பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள் என்று இயக்குனர் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

விஜய்யின் பாராட்டு டார்லிங் படக்குழுவினருக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Read more ...

யு சான்றிதழ் பெற்ற முதல் பேய் படம்



வழக்கமாக பேய், பிசாசு, ஆவி சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும். அண்மைக் காலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது ரசிக்கப்படுகின்றன. ‘அரண்மனை’, ‘பிசாசு’, ‘டார்லிங்’ படங்களின் வெற்றிக்கு பின்னர் குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் நட்சத்திரங்களாக பேய்களும் ஆவிகளும் மாறிவருகின்றன.
இந்த வரிசையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படமும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். இதில் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
சமீபகாலமாக கொடூர வில்லனில் இருந்து காமெடியில் கலக்கும் ‘நான் கடவுள் ‘ராஜேந்திரன், இப்படத்தில் வவ்வால் பாண்டியாக முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் கலகலப்பூட்டி கலக்குகிறார். இப்படத்தை இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ் ஆகியோரிடம் பணிபுரிந்து சூர்ய பிரபாகர் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார். படத்தை 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க திகில், நகைச்சுவை கலந்த படமாக உருவாகியிருக்கும் இப்படம் குழந்தைகள் முதல் பெயரிவர்கள்வரை அனைவரும் கவரும்படியாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், வழக்கமாக திகில் படங்களுக்கு தணிக்கை துறையினர் யுஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். ஆனால், இப்படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ள தணிக்கை துறையினர், குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக எடுத்ததற்கு படக்குழுவினருக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் கதை நடந்தாலும் சிங்கப்பூர். மலேசியா ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக கம்போடியா அங்கோர்வாட் கோயிலிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
ஆவி, பேய் தொடர்பான படக்கதைகள் வழக்கமாக பழைய பங்களா, காடு, மலை என்று சில குறிப்பிட்ட இடங்களில்தான் சுழலும். இப்படம் மலிவாக சொல்லாமல் பாடல் காட்சிகளுக்கு வெளிநாடுகள் சென்று சுமார் ஒன்றரை கோடி வரை செலவிட்டுள்ளார்கள். இது ஒரு ஜாலியான ஆவி கதை. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
Read more ...
Designed By Blogger Templates